இந்திய அணியை மோசமாக கிண்டலடித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்: கிழித்தெடுத்த ரசிகர்கள்
டிராவிஸ் ஹெட்டை வைத்து இந்திய அணியை மைக்கேல் வாகனை ரசிகர்கள் கடுமையாக விளாசி வருகின்றனர்.
ருத்ர தாண்டவமாடிய டிராவிஸ் ஹெட்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இப்போட்டியில் டிராவிஸ் ஹெட் (Travis Head) 141 பந்துகளில் 4 சிக்ஸர், 17 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்கள் விளாசினார்.
Travis Head is a Example of Alpha Mindset to all the Men Around the World - Doesn't matter if the World is Praying for Your Downfall, Keep Winning infront of them pic.twitter.com/zuOMBGQCde
— DHRUV (@Being_Dhruv_) December 9, 2024
அவரது ஆட்டம் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்க, சிராஜ் ஓவரில் ஹெட் கிளீன் போல்டு ஆனார்.
மோசமாக கிண்டல் செய்த மைக்கேல் வாகன்
டிராவிஸ் ஹெட்டை அவுட் செய்ய இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறியதாக, இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் (Michael Vaughan) மோசமாக கிண்டல் செய்து பதிவிட்டார்.
அவர் தனது பதிவில், "டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்க செய்ய இந்திய அணிக்கு இந்த பீல்டு தேவைப்பட்டது" என ரசிகர்கள் மைதானத்தில் சூழ்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.
This is the field India needed for Travis head … #AUSvIND pic.twitter.com/M6hmnFVd9a
— Michael Vaughan (@MichaelVaughan) December 8, 2024
ரசிகர்கள் பதிலடி
இந்த பதிவிற்கு பதிலடி போல் ரசிகர்கள் பலர் வாகனை விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு ரசிகர், "வாகன் பதிவிட்ட புகைப்படம் அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி தோல்வியுற்ற போட்டிகளின் எண்ணிக்கை" என கூறினார்.
மற்றொருவர், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இங்கிலாந்து எந்த இடத்தில் உள்ளது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |