விசிக, முஸ்லீம் லீக் ஆதரவு - முதலமைச்சராகிறார் விஜய்
தவெக ஆட்சியமைக்க விசிக ஆதரவளித்துள்ள நிலையில், பெரும்பாண்மையுடன் விஜய் முதல்வராக உள்ளார்.
தவெகவிற்கு விசிக ஆதரவு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

தற்போது 116 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ள நிலையில், 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக இன்று காலை 11 மணிக்கு தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தது.
ஆனால், தற்போது மாலை 4 மணிக்கு தங்களது முடிவை அறிவிப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, தவெகவிற்கான விசிகவின் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

இதில் பேசிய அவர், "வெற்றி வெற்றி வெற்றி. அனைத்து தோழமை கட்சிகளும், காங்கிரஸ் தோழர்களுக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும், என்னுடைய ஆசான் அண்ணன் திருமாவளவனின் விசிக தோழர்களுக்கும் நன்றி.
ஜனநாயகம் காக்கப்படும். மக்களின் ஆதரவுடன் எங்கள் தலைவர் விஜய் முதல்வர் ஆவார்" என தெரிவித்துள்ளார்.
மேலும், 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நேற்று எங்கள் கூட்டணி தலைவர் முகஸ்டாலின் சொன்னால் மட்டுமே ஆதரவு வழங்குவோம் என கூறி வந்த நிலையில், தற்போது தவெகவிற்கு ஆதரவு வழங்குவதற்கான கடிதத்தை அளித்துள்ளது.
இதன் மூலம் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில் தற்போது தவெகவிற்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |