தங்கத்தை மிஞ்சிய வெள்ளி: இனி புதிய சகாப்தம் தொடங்கும்! வேதாந்தா குழும தலைவர் தகவல்
வெள்ளியின் பொற்காலம் தற்போது தான் தொடங்குவதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
உயரும் வெள்ளி விலை
தங்கம் விலையுயர்ந்த உலோகமாக இன்றும் தனது சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் அதே வேளையில், வெள்ளி தனது பொற்காலத்தை தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு தங்கத்தின் விலை 63% உயர்ந்து இருந்தாலும், டொலர் மதிப்பில் இந்தாண்டு வெள்ளியின் மதிப்பு சுமார் 125% உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலை உயர்வை ஒப்பீடும் போது, தங்கத்தின் விலை உயர்வு பாதி அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 1ம் திகதி ரூ. 1 லட்சத்துக்கு விற்கப்பட்ட 1 கிலோ வெள்ளி, தற்போது ரூ.2.45 லட்சத்துக்கும் விற்கப்படுகிறது.
வேதாந்தா குழும தலைவர் கருத்து

இந்நிலையில் வெள்ளியின் விலை உயர்வு குறித்து வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெள்ளி தன்னுடன் பிறந்த மதிப்பு மிக்க உலோகம் தங்கத்தின் நிழலில் இருந்து வெளியேறி, தனக்கான புதிய சிறப்பான ஆண்டாக இத்தனை அமைத்துள்ளது.
சூரிய ஆற்றல், மின்கலங்கள், மின்சார பேட்டரிகள், வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் மூலப்பொருளான வெள்ளியின் தேவை பரவலாக தேவைப்படுகிறது.
இந்தியாவில் வெள்ளியின் ஒரே உற்பத்தியாளர் என்ற முறையில் இதை நாங்கள் நேரடியாகவே கண்டுள்ளோம். வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், வெள்ளியின் மதிப்பு அசாதாரணமாக நிலைத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |