சந்திராயன்-3 திட்டத்தில் பெருமை சேர்த்த தமிழர் வீரமுத்துவேல்! யார் இவர்?
சந்திராயன்-3 திட்டத்தில் பங்களித்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் மிகவும் முக்கியமானவர். அவரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
சந்திராயன்-3 விண்கலம்
ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் சந்திராயன்-3 விண்கலம் செல்கிறது. இந்த விண்கலம் வெற்றிகரமாக ஏவப்படும் நிகழ்வை உலகமே உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது.
சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கினால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுவது மட்டுமல்லாமல், நிலவில் தென்பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையும் பெறும்.
யார் இந்த வீரமுத்துவேல்
தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரமுத்துவேலின் தந்தை ரயில்வே ஊழியராக பணியாற்றிய பழனிவேல். வீரமுத்துவேலுக்கு சிறுவயதில் இருந்தே விண்வெளியில் சாதிக்க வேண்டும் என்ற திறமை இருந்தது. இவர், தொழிற்கல்வி முடித்து விட்டு, தாம்பரம் தனியார் கல்லூரியிலும் , சென்னை ஐஐடியில் தொழிற்கல்வி, பொறியியல், முதுநிலை ஆராய்ச்சி என தொடர்ந்து படித்து வந்தார்.
அப்போது அவர், ஏரோ-ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதனால், இவருக்கு 1989 ஆம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாகும் வாய்ப்பும் கிடைத்தது. டிப்ளமோ படிப்பு படித்த வீரமுத்துவேலுக்கு நுணுக்கமான வேலைகளும் தெரிந்ததால், அனைத்து வேலைகளையும் செய்யும் பழக்கம் இவருக்கு உண்டு.
சந்திராயன் -3 திட்டத்தில் இணைந்தது எப்படி?
2016 ஆம் ஆண்டு வீரமுத்துவேல் சமர்ப்பித்த விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்த ஆய்வுக்கட்டுரை, பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதனை செய்யப்பட்டது.
நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் வீரமுத்துவேல் உருவாக்கிய தொழிநுட்பம் உதவியாக இருப்பதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. இத்தனை சாதனை செய்து பலரது பாராட்டையும் பெற்ற வீரமுத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனர் ஆனார்.
கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றிய இவர், 2019 ஆம் ஆண்டு சந்திரயான்-3 திட்டதின் இயக்குனர் ஆனார். பின்பு, வீரமுத்துவேலுக்கு கீழ் 29 துணை இயக்குநர்களும், அவர்களுக்குக் கீழே எண்ணற்ற விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோரும் இணைந்து சந்திரயான்-3 திட்டத்தை உருவாக்கினர்.
கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகள், ஆய்வுகள் செய்து சந்திரயான்-3 விண்கலம் முழுமையான வடிவத்தை பெற்றது. மெய்நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் மற்றும் வன்பொருள் என அனைத்து துறைகளிலும் அதிக ஈடுபாடு கொண்ட வீரமுத்துவேல் தன்னுடைய 2 ஆண்டு காலத்தை ஆய்வகத்திலேயே செலவிட்டார்.
சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களில் தமிழர்களே திட்ட இயக்குநராக இருந்த நிலையில் சந்திரயான்-3 திட்டத்திலும் தமிழரே திட்ட இயக்குநராக இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |