சுவையான வெஜ் மோமோஸ்: வீட்டிலேயே இட்லி பாத்திரத்தில் ஈஸியா செய்யலாம்
மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு.
உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு.
மோமோஸ்ஸில் பல வகை இருக்கிறது. இதில் நாம் சுவையான வெஜ் மோமோஸ் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
The Spruce / Julia Hartbeck
தேவையான அளவு
- மைதா-1கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்-தேவையான அளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
- பச்சைமிளகாய்-2
- வெங்காயம்-1
- மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்
- முட்டைகோஸ்- 1/2 கப்
- கேரட் -1/2 கப்
- சோயா சாஸ்- 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு பிணைந்துகொள்ளவும்.
பின் ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
இதனைத்தொடர்ந்து அதில் நறுக்கிய முட்டைகோஸ், கேரட் சேர்த்து வதக்கவும். கடைசியாக அதில் சோயா சாஸ் மற்றும் கொத்தமல்லி இல்லை தூவி கிளறி இறக்கிவிடவேண்டும்.
மோமோஸ் செய்வதற்கு பிணைந்து வைத்துள்ள மைதா மாவை வட்ட வடிவில் தேய்த்து செய்து வைத்த ஸ்டப்பிங்கை இதில் வைத்து மோமோஸ் போல் மடிக்கவும்.
பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி மோமோசை அடுக்கி 20-25 னிடம் வகை வைத்து இறக்கினால் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |