இலங்கையில் எலும்பும் தோலுமாக சுற்றிய பிரபலம் மரணம்! வீகன் உணவுமுறையே காரணம்
வீகன் உணவு முறையை அறிவுறுத்தி வந்த ரஷ்யாவை சேர்ந்த 38 வயதேயான சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 39 வயது ஜானா சாம்சோநோவா மரணமடைந்துள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் வீகன் உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என ஓன்லைனில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்.
அதுமட்டுமில்லாமல் பச்சை காய்கறிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திவந்த இவர் இணையவாசிகளிடையே பிரபலமாக அறியப்பட்டார்.
அவர் உணவு உண்ணாமல் பட்டினியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் காலரா நோயால் அவர் இறந்திருக்கலாம் எனவும் அவர் குடும்பம் சந்தேகப்படுகிறது.
இலங்கையில் மெலிந்து திரிந்த இவரை சிகிச்சைக்காக வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர் சிறிது நாட்களில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமான பொழுதும் அவர் சிகிச்சை பெறவில்லை. அவர் கடந்த சில வருடங்களாகவே பழங்களை மட்டுமே உண்டு வந்துள்ளார்.
அவர் சமீபத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில் ஒவ்வொரு நாளும் தனது உடலும் மனமும் மாறுவதாகவும், ஒருபோதும் இந்த உணவு பழக்கத்திலிருந்து பின்வாங்கமாட்டேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.