அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்?

India Bihar Commonwealth Games
By Karthikraja Jul 25, 2026 02:25 PM GMT
Report

 காய்கறி விற்று, இ-ரிக்ஸா ஓட்டி வறுமையில் இருந்த ஜண்டு குமார் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 ஆம் திகதி ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.  

அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்? | Vegtable Seller Jhandhu Kumar Won Medal For India

74 நாடுகளை சேர்ந்த சுமார் 3000 வீரர், வீராங்கனைகல் இதில் கலந்து கொள்கின்றனர்.

ஜண்டு குமார்

இதில், ஆடவர் ஹெவிவெயிட் பாரா பவர்லிப்டிங் பிரிவில் இந்தியாவின் ஜண்டு குமார்(jhandu kumar) வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். 

அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்? | Vegtable Seller Jhandhu Kumar Won Medal For India

இது, 2026 காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள முதல் பதக்கம் ஆகும்.

பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டம், ஹர்நாத் என்ற ஊரில் பிறந்த 28 வயதான ஜண்டு குமார், தனது 5 வயதிலே போலியோ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெற்றோர் சிறிய காய்கறி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அவரது பெற்றோருக்கு பக்கபலமாக இவரும் காய்கறி விற்று வந்துள்ளார்.

தினமும் காய்கறிகள் வாங்குவதற்காக பீகார் ஷெரீஃபிற்கு சுமார் 20 கி.மீ பயணம் செய்து, அவற்றை மீண்டும் கொண்டு வந்து சந்தையில் விற்பேன் என தெரிவித்துள்ளார். 

அன்று காய்கறி விற்றவர், இன்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார் - யார் இந்த ஜண்டு குமார்? | Vegtable Seller Jhandhu Kumar Won Medal For India

அதன்பின்னர், மேம்பாலம் கட்டுவதற்காக அவரது காய்கறி கடை அங்கிருந்து அகற்றப்பட்டபோது தனது வருமானத்திற்காக, நண்பர்களிடம் கடன் பெற்று மின்சார ரிக்ஸா வாங்கி ஓட்டி வந்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லும் ஜண்டு குமாருக்கு அப்போது பாரா பவர்லிஃப்டிங் பற்றி எதுவும் தெரியவில்லை. 2018 ஆம் ஆண்டில் அதுகுறித்து தெரிய வந்த போது, அதற்காக கடுமையாக பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் தேசிய பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அவர் தனது மின்சார ஆட்டோவை விற்றார்.

ஜண்டுவின் ஆர்வத்தை கவனித்த தேசியப் பயிற்சியாளர் ராஜேந்தர் சிங் ரஹேலு, காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தில் பயிற்சி பெறுமாறு ஜண்டுவை அழைத்தார்.

அதைத்தொடர்ந்து, முதல் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம், ஆசியா-ஓசியானியா திறந்தநிலை பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் என பல்வேறு போட்டிகளை பதக்கங்களை குவிக்க தொடங்கியுள்ளார்.

பதக்கம் வென்ற பின்னர் பேசிய ஜண்டு குமார், "நான் பறப்பது போல் உணர்கிறேன். இது எனது முதல் பதக்கம். என் மனதில் ஒரே ஒரு எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது: நான் இந்தப் பதக்கத்தை வென்றே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அவர்கள் என்னை இவ்வளவு பயிற்சி செய்ய அனுமதித்ததற்கும், என் மீது இவ்வளவு அன்பு காட்டியதற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) குறித்து பேசிய அவர், "நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் அங்கே பயிற்சி செய்கிறோம், ஒரு வகையில் இந்தப் பதக்கம் அவர்களுக்கே சொந்தமானது," என்று கூறினார். 

பதக்கம் வென்றுள்ள ஜண்டு குமாருக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US