சுவிஸ் சாலைகளில் ஆபாச வீடியோவுடன் வலம் வந்த வாகனம்: பின்னணி
சுவிஸ் சாலைகளில் ஆபாச வீடியோவை ஓடவிட்டபடி வலம் வந்த வாகனம் ஒன்று சர்ச்சையை உருவாக்கியது.
ஆபாசம் அல்ல கலை என முன்வைக்கப்பட்ட விவாதம்
ஜெனீவாவில், வாகனம் ஒன்றின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்ட திரைகளில் ஆபாச வீடியோ ஓடியதால், பொலிசார் அந்த வாகனத்தைக் கைப்பற்றினார்கள். விசாரணையில், அது பாலியல் நிறுவனம் ஒன்றிற்கான விளம்பரம் என தெரியவந்தது.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட, அவர் அந்த விளம்பரத்தை கலையம்சத்துடன் பார்க்கவேண்டும் என்றும் அது ஆபாசம் அல்ல என்றும் வாதிட்டார்.
அபராதம் விதித்த நீதிமன்றம்
தங்கள் நிறுவனத்துக்காக சுவர்களில் விளம்பரம் செய்ய யாரும் அனுமதி தரவில்லை என அந்த நிறுவனம் புகாரும் கூறியது.
ஆனாலும், சிறு பிள்ளைகள் அந்த ஆபாசப்படங்களைக் காண அந்த விளம்பரம் வழிவகை செய்ததாகவும், வாகனங்களில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி போக்குவரத்துக்கு தொந்தரவாக இருந்ததாகவும் கூறி, அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 5,600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |