உடல் குளிர்ச்சிக்கு கிராமத்து ஸ்டைல் வெந்தய குழம்பு: எப்படி செய்வது?
வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.
வெந்தயம் உடலில் குளிர்ச்சியை உண்டாக்குவதில் முடிஉதிர்வு பிரச்னை, சரும பிரச்சனை போன்றவைகள் அனைத்திற்கும் தீர்வாக இருக்கின்றன.
வெந்தயத்தில் சுவையான வெந்தய குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மல்லி- 1 ஸ்பூன்
- மிளகு- 1/2 ஸ்பூன்
- அரிசி- 1/2 ஸ்பூன்
- சீரகம்- 1/2 ஸ்பூன்
- வெந்தயம்- 1/2 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு- 1/2 ஸ்பூன்
- உளுந்து- 1/2 ஸ்பூன்
- பூண்டு- 10 பல்
- கருவேப்பிலை- 1 கொத்து
- சின்ன வெங்காயம்- 10
- தக்காளி- 1
- மஞ்சள் தூள்-1/2
- பெருங்காய தூள்- 1/2
- புளி- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, அரிசி, சீரகம், வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின் கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானது அதில் கடுகு, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். இதனை தொடர்ந்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
15- 20 நிமிடம் நன்கு கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அனைத்து பரிமாறினாள் சுவையான வெந்தய குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |