கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் வறுமையில் வாடும் பெண்களுக்காக துவக்கியுள்ள நல்ல முயற்சி
நீ இலங்கையிலிருந்து தப்பி வெளியேறினால் உன் மக்களுக்கு உன்னால் உதவமுடியலாம் என்று தன் தந்தை கூறியதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து கனடாவுக்குச் சென்றவர் துரைரத்னம்.
ஆனால், தன் மனம் இன்னமும் தன் தாய்நாட்டிலேயேதான் இருக்கிறது என்கிறார் அவர்.
Scarboroughவில் நடைபெற இருக்கும் Tamil Fest 2022 நிகழ்ச்சியில், இலங்கையில் தயாரிக்கப்படும் மேட் இன் முல்லைத்தீவு புடவைகள் முதலான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
அவற்றை அறிமுகம் செய்ய இருப்பவர் இலங்கைத் தமிழரான துரைரத்னம் (Thushy R. Thurairatnam).
இலங்கையில் யுத்தம் நடந்தபோது ’நீ இலங்கையிலிருந்து தப்பி வெளியேறினால் உன் மக்களுக்கு உன்னால் உதவமுடியலாம்’ என்று தன் தந்தை கூறியதைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளியேறியவர் துரைரத்னம்.
1996ஆம் ஆண்டு கனடா வந்தடைந்த துரைரத்னம், Scarboroughவில் பிரிண்டிங் பிசினஸ் ஒன்றைத் துவங்கினார்.
Dan Pearce/Metroland
சமீபத்தில் தனது தாய்நாடான இலங்கையில், தான் வாழ்ந்த முல்லைத்தீவுக்குச் சென்ற துரைரத்னம், அங்கு யுத்தத்தின் தாக்கத்தால் இன்னமும் தன் மக்கள் அவதியுறுவதைக் கண்டுள்ளார். அங்கு பெரும்பாலான குடும்பங்களை விதவைகள் நடத்துவதைக் கண்டுள்ளார் அவர். அவர்களில் சிலருடைய கணவர்கள் யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள். அதற்குப் பிறகு அவர்களைக் குறித்து எந்த தகவலும் இல்லை!
இந்தப் பெண்கள் வறுமையை மேற்கொள்வதற்கு உதவியாக ஏதாவது செய்யவேண்டும் என முடிவு செய்த துரைரத்னம், அங்கு சில தொண்டுநிறுவனங்கள் அந்த பெண்களுக்கு துணி நெய்வதற்கு தறிகள் வாங்கிக் கொடுத்து, அவர்களுக்கு துணி நெய்வதற்கு பயிற்சியும் கொடுத்துள்ளதை அறிந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்கள் நெய்த புடவைகள், அவர்கள் தயாரித்த சட்டைகள், சூட் தைப்பதற்கான துணி ஆகியவற்றைக் கனடாவுக்குக் கொண்டுவந்துள்ளார் அவர்.
அவை, Scarboroughவில் இம்மாதம் (ஆகத்து) 27 மற்றும் 28 ஆகிய நட்களில் நடைபெற இருக்கும் Tamil Fest 2022 விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
நீ இலங்கையிலிருந்து தப்பி வெளியேறினால் உன் மக்களுக்கு உன்னால் உதவமுடியலாம்’ என்று தன் தந்தை கூறியதை நினைவுகூறும் துரைரத்னம், தந்தை கூறியபடி கனடாவுக்கு வந்தாலும், போர் முடிந்ததும் எப்படியாவது தன் தாய்நாட்டுக்குத் திரும்பி, அங்கு வாழவேண்டும், அங்கு ஏதாவது சமூக சேவை செய்யவேண்டும் என்பதே தன் கனவு என்கிறார்.
என் மனம் எப்போதுமே என் தாய்நாட்டில்தானே உள்ளது என்கிறார் அவர்.