வெனிசுலா நிலநடுக்கம்... குறைந்தது 50,000 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம்

Earthquake Venezuela
By Arbin Jun 28, 2026 11:01 AM GMT
Report

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களில் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் வாய்ப்பு நேற்று இரவு முடிவடைந்த நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் பல்லாயிரக்கணக்கானோர் மரணமடைந்திருக்கலாம் என மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இனி வாய்ப்புகள் குறைவு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதன்கிழமை மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், சுமார் 1,500 பேர் மரணமடைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; அதேவேளையில், குறைந்தது 50,000 பேரைக் காணவில்லை என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலா நிலநடுக்கம்... குறைந்தது 50,000 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம் | Venezuela Earthquake 50000 Dead

மீட்புக் குழுவினர் நேற்று இடிபாடுகளுக்குள் இருந்து மக்களைத் தொடர்ந்து மீட்டனர்; இதில் உயிர் பிழைத்த ஒரு பச்சிளம் குழந்தையும் அடங்கும்.

ஆனால் மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் செய்தி ஊடகத்திடம் தெரிவிக்கையில், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய முதல் 48 முதல் 72 மணிநேர காலத்தை, இடிபாடுகளுக்குள் உயிருடன் சிக்கியிருப்பவர்களைச் சென்றடைவதற்கான 'பொற்காலம்' என்று நாங்கள் கருதுகிறோம்.

அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் வேகமாக குறைந்துவிடுகின்றன என்றார். தற்போது வெனிசுலாவில் உலகெங்கிலும் இருந்து 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

சார்லஸ் மன்னருக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இளவரசர் ஹரி: திட்டத்தில் அதிரடி மாற்றம்

சார்லஸ் மன்னருக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த இளவரசர் ஹரி: திட்டத்தில் அதிரடி மாற்றம்

புதன்கிழமை மாலை 6 மணிக்குச் சற்றுப் பிறகு, சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வெனிசுலாவை உலுக்கின. முதலில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 36 வினாடிகள் கழித்து 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நூற்றாண்டில் வெனிசுலாவைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கமாகும். இடிந்து விழுந்த வணிக வளாகங்கள் மற்றும் தொகுப்பு குடியிருப்பு கட்டிடங்களின் கோரமான படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், காயமடைந்தவர்களால் தாங்கள் திணறி வருவதாக உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன.

வெனிசுலா நிலநடுக்கம்... குறைந்தது 50,000 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம் | Venezuela Earthquake 50000 Dead

தலைநகர் கராகஸுக்கு வடக்கே உள்ள லா குவைரா கடலோரப் பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது; அங்கு தொடரும் நில அதிர்வுகளுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

100,000 வரை இருக்கலாம்

கராகஸில் குறைந்தது 1,600 கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. கட்டிடங்களும், பாலங்கள் மற்றும் சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளும் நொடிகளில் சரிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வெனிசுலா நிலநடுக்கம்... குறைந்தது 50,000 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம் | Venezuela Earthquake 50000 Dead

கடந்த ஜனவரியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சோசலிசத் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை இரவு நேரத் தாக்குதலில் கைது செய்ததிலிருந்து வெனிசுலா கொந்தளிப்பில் உள்ளது.

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக அவர் நியூயார்க்கில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க மீட்புக் குழுக்களையும் 150 மில்லியன் டொலர் நிதியுதவியையும் வெனிசுலாவிற்கு அளித்துள்ளார்.

வெனிசுலா நிலநடுக்கம்... குறைந்தது 50,000 பேர் இறந்திருக்கலாம் என்று அச்சம் | Venezuela Earthquake 50000 Dead

இந்த நிலையில், வெனிசுலாவில் இறுதி இறப்பு எண்ணிக்கை 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.

இதனிடையே, தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்னும் 50,000 பேர் காணாமல் போயுள்ளனர். வெனிசுலாவுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US