வெனிசுலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு: மக்களுக்கு அரசு முன்வைத்த கோரிக்கை
வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு
இரு தினங்களுக்கு முன்பு வெனிசுலா நாட்டில் ரிக்டர் 7.1 மற்றும் ரிக்டர் 7.5 அளவிலான சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 920 ஆக உயர்ந்து இருப்பது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3,360 பேர் காயமடைந்துள்ளனர், 383 கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
அதே நேரத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 30,000 ஆக உயர்ந்து இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
இந்நிலையில் நிலநடுக்கத்திற்கு பிறகு முன்னெடுக்கப்படும் மீட்பு பணிகள் மற்றும் சேத விவரங்கள் குறித்த தகவலை அந்நாட்டு தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அதில், நிலநடுக்கத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் மக்களை ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் பாராட்டினார்.
அதே சமயம், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இதனால போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே மருத்துவ குழுவினர் எந்தவொரு தடையும் இன்றி தங்களுடைய பணியை செய்ய தன்னார்வலர்கள் சாலைகளில் கூட்டமில்லாமல் வைத்திருக்க செய்வதே மிகப்பெரிய உதவி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |