அமெரிக்காவின் ஒற்றை நடவடிக்கை... எண்ணெய் விலையில் பெரும் தள்ளுபடி கேட்கும் சீனா
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றிய நிலையில், தற்போது சீனா உட்பட அந்த நாட்டின் எண்ணெய் வாடிக்கையாளர்கள் அனைவரும் விலையில் பெரும் தள்ளுபடி கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தள்ளுபடி விலை 21 டொலராக
அத்துடன், நீண்டகால ஒப்பந்தத்தில் இருந்து, தேவைக்கேற்ற ஒப்பந்தம் என மாற்றம் கொண்டுவரவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீதான அமெரிக்காவின் அழுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க கடலோர காவல்படை கடந்த வாரம் வெனிசுலாவின் கடற்பகுதிக்கு அருகே ஸ்கிப்பர் என்ற கப்பலை முற்றுகையிட்டு, தென் அமெரிக்க நாட்டிலிருந்து ஒரு எண்ணெய் கப்பல் அல்லது சரக்குகளை முதன்முதலில் கைப்பற்றியது.
மட்டுமின்றி, வெனிசுலாவில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 6 கப்பல்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடைகள் விதித்துள்ளது.
எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் நேரம், தடைகளின் கீழ் இருக்கும் கச்சா எண்ணெய் சீனாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுவதால், PDVSA நிறுவனம் அதன் முக்கிய சந்தையான சீனாவிற்கு ஒப்பந்த விலைக்கு அருகில் அதன் கச்சா எண்ணெயை ஒதுக்க ஏற்கனவே சிரமப்பட்டு வந்தது.
மட்டுமின்றி, வெனிசுலாவில் இருந்து வெளியேற முடியாமல் கப்பல்கள் சிக்கியுள்ளதையும், அமெரிக்க நெருக்கடிக்கு பயந்து கப்பல்கள் எண்ணெய் ஏற்றாமல் வெளியேறுவதையும் PDVSA நிறுவனம் எதிர்கொள்ள நேர்ந்தது.
சீனாவிற்கு ஏற்றுமதியாகும் வெனிசுலாவின் முதன்மையான Merey heavy கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி விலை 21 டொலராக அதிகரித்துள்ளது. சந்தையில் Merey heavy கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 60 டொலருக்கு விற்பனையாகும் நிலையிலேயே, சீனா கடும் அழுத்தமளித்து வருகிறது.

கரீபியனில் அமெரிக்க இராணுவத்தின் அதிகரித்த நடமாட்டம் காரணமாக ஏற்படும் இடையூறுகள், தாமதங்கள் அல்லது திசைதிருப்பப்படும் பயணங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கப்பல் உரிமையாளர்கள் கோரிய அதிகரித்து வரும் செலவுகளே இந்த தள்ளுபடி அதிகரிப்பின் நோக்கம் என கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து
2019ல் PDVSA முதன்முதலில் தடைகளால் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க வளைகுடா சுத்திகரிப்பு நிறுவனங்கள் உட்பட அதன் முதன்மையனா வாடிக்கையாளர்களை இழந்ததால், நிறுவனம் அதிக விலை தள்ளுபடிகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், தடைகளின் கீழ் உள்ள ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து பெரும் மலிவு விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளைப் பெறும் சீன, தற்போது PDVSA நிறுவனத்தில் இருந்தும் விலை குறைப்பை எதிர்பார்க்கிறது.

இந்த ஆண்டு, வெனிசுலாவின் மாதாந்திர எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 55% முதல் 90% வரையிலான இலக்கை எட்டியுள்ளது, கடந்த ஆண்டு இது 40%-60% ஆக இருந்தது. நவம்பரில், வெனிசுலா ஒரு நாளைக்கு 952,000 பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்ததில் 778,000 பீப்பாய்கள் சீனாவிற்கு சென்றன.
சுயாதீன சீன எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் ஏற்கனவே ரஷ்யா மற்றும் ஈரானில் இருந்து மலிவு விலை எண்ணெய் விநியோகங்களை பெருமளவு குவித்துள்ளதால், வெனிசுலாவில் இருந்து தற்போது எண்ணெய் வாங்கும் நிலையில் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |