அமெரிக்க ஆதரவா... வெனிசுலாவில் வேட்டையாடப்படும் அப்பாவி மக்கள், குடும்பங்கள்
வெனிசுலா தலைநகரின் வெறிச்சோடிய தெருக்களில் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்திய நபர்கள் கூட்டமாக சுற்றி வந்து அமெரிக்க ஆதரவு, துரோகிகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சித்திரவதை மற்றும் மரணம்
அமெரிக்க இராணுவத்தால் வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அதிரடியாக கைது செய்யப்பட்டு, நியூயார்க் நகருக்கு கடத்தப்பட்டதன் பின்னர், வெனிசுலாவில் அமதியின்மை தீவிரமடைந்துள்ளது.

வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை மொத்தமாக சொந்தம் கொண்டாட முடிவு செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மதுரோவை கைது செய்த உடனையே, அங்கிருந்து அமெரிக்க இராணுவத்தை வெளியேற்றிவிட்டார்.
ஆனால் தற்போது வெனிசுலாவின் பலம் பொருந்திய குழுக்கள் அதிகாரத்தை தங்கள் கைவசமெடுத்துள்ளது. வேறு வழியில்லை என்றால் மட்டுமே குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் அவர்கள் வெளியேறும்போது, கடத்தப்பட்டு நாட்டின் மிக மோசமான El Helicoide சிறையில், சித்திரவதை மற்றும் மரணத்திற்கு உள்ளாக நேரிடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
வெனிசுலா அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தகவல் பொதுமக்களின் அலைபேசிகளில் காணப்பட்டால், அவர் மாயமானார் என்றே கருதப்படும் நெருக்கடி நிலை.
அத்துடன், வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் ஒவ்வொரு திருப்பத்திலும் மூச்சைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு சோதனைச் சாவடி தென்படக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஆதரிப்பதில் ஈடுபட்ட
இதனிடையே, தேசிய காவல்படை உறுப்பினர்கள் தங்கள் சீருடை இல்லாமல் பொதுமக்களுடன் கலந்து, அமெரிக்க ஆதரவு நபர்களின் உரையாடல்களைக் கேட்கிறார்கள். மதுரோ கைதானதன் பின்னர் வெனிசுலா மக்களுக்கு நல்ல காலம் விடியும் என்று அமெரிக்கா கூறி வந்தது.
ஆனால், தற்போது வெனிசுலா மொத்தம் கடுமையான கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. ரகசியக் காவல்துறை வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டல்களை அடையாளம் கண்டு, கண்காணிக்கிறது.

இடைக்கால ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், இயற்கை பேரழிவுகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் அரசியலமைப்பு உரிமைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்காவின் ஆயுதமேந்திய தாக்குதலை ஊக்குவிப்பதில் அல்லது ஆதரிப்பதில் ஈடுபட்ட எந்தவொரு நபரையும் தேடிப் பிடிக்க அவர் சர்வ வல்லமையுள்ள, இராணுவமயமாக்கப்பட்ட அரசின் முழுப் பலத்தையும் பயன்படுத்தி வருகிறார்.
இதற்கிடையில், ரோட்ரிக்ஸ் அதிகாரத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும், மதுரோவின் பதவி பறிப்பு என்பது வெறும் நாடகம் என்றே மக்கள் அஞ்சுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |