வெனிசுலா நிலநடுக்கம்: மனைவி குழந்தைகளை இழந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர்
வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கி அர்ஜென்டினா கால்பந்து அணி வீரரின் குடும்பம் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா அணி வீரர் குடும்பம் உயிரிழப்பு
வெனிசுலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த மிகப்பெரிய நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1430 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,360 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் போது பிலாயா கிராண்டே மிகவும் பாதிப்படைந்ததாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்த அர்ஜென்டினா கால்பந்து அணி வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி யானினா மாரானெல்லா மற்றும் அவரது குழந்தை ஆரோன் மற்றும் ஜன்ஹோவா ட்ரெஜோ ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

முதலில் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் குழந்தைகள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர்கள் உயிரிழந்ததை மீட்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிலநடுக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த போது லூகாஸ் ட்ரெஜோ தனது கால்பந்து அணியுடன் வேறொரு இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்து தவிக்கும் லூகாஸ் ட்ரெஜோவுக்கு அவரது வெனிசுலா கால்பந்து கிளப் டிபோர்ட்டிவோ லா குயைரா இரங்கல் தெரிவித்துள்ளது.

வெனிசுலா வீரரின் மனைவி உயிரிழப்பு
நிலநடுக்கத்தின் போது வெனிசுலா கால்பந்து அணியின் வீரர் ஹெக்டர் பெல்லோவின் மனைவி ஆண்ட்ரியா தன்னுடைய 9 மாத பெண் குழந்தையை காப்பாற்றும் முயற்சியின் போது உயிரிழந்துள்ளார்.
கட்டிடம் இடிந்து விழும் போது ஆண்ட்ரியா குழந்தைக்கு அரணாக இருந்து பாதுகாத்துள்ளார். தற்போது மீட்கப்பட்ட குழந்தை காரகஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |