வெனிசுலா நிலநடுக்கம்: 10,000-ஐ தாண்டக்கூடும் உயிரிழப்புகள்: ஐ.நா விடுத்த எச்சரிக்கை
வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழப்புகள் கிட்டத்தட்ட 10000-தை தாண்டக்கூடும் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா எச்சரிக்கை
கடந்த வாரம் வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-தை தாண்டக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
வெனிசுலா நாட்டுக்கான ஐ.நா மனிதநேய ஒருங்கிணைப்பாளர் ஜியான்லுகா ராம்போலா திங்கட்கிழமை இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
10,000 என்ற எண்ணிக்கை வெளியிட்டு இருந்தாலும், உயிரிழப்புகள் இந்த எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கும் என்று நம்புவதாக ராம்போலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 2,500க்கும் அதிகமான கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் வெப்பமண்டல அலை(Tropical Wave) வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பமண்டல அலை அதிகப்படியான மழையை கொண்டு வரும் போது ஏற்கனவே வீடுகளை இழந்த மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வார்கள், இது மக்களின் நிலைமையை மேலும் மோசமடைய வைக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த மோசமான வானிலை மீட்பு பணிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தும் என்று மனிதநேய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |