வெனிசுலா ஜனாதிபதி மதுரோ, மனைவியுடன் கைது: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்தி, அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ளது என்றும், அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மதுரோவும் மனைவியும் கைது
இராணுவத் தலைவர் மானுவல் நோரியேகாவைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக 1989-ல் பனாமாவின் மீது படையெடுத்ததற்குப் பிறகு, அமெரிக்க அரசாங்கம் லத்தீன் அமெரிக்காவில் இத்தகைய நேரடித் தலையீட்டை மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது Truth சமூக ஊடகத்தில், வெனிசுலா மற்றும் அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மீது பெரிய அளவிலான ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என பதிவிட்டுள்ளார். ஆனால், மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ளதை வெனிசுலா அரசாங்கம் இதுவரை உறுதி செய்யவில்லை.
கட்டுப்பாடு செலுத்த
ஜனாதிபதி மதூரோ ஒரு போதைப்பொருள் கடத்தல் ஆட்சியை நடத்துவதாகவும், தேர்தலில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது.

2013-ஆம் ஆண்டில் ஹியூகோ சாவேஸுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மதுரோ, உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ள வெனிசுலா மீது அமெரிக்கா கட்டுப்பாடு செலுத்த விரும்புவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |