புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு
அமெரிக்காவில் வாழும் தங்கள் நாட்டு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை திருப்பி அழைத்துக்கொள்ள, அமெரிக்காவுக்கு விமானங்கள் அனுப்பியுள்ளது ஒரு நாடு.
அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு
அமெரிக்காவில் வாழும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது அமெரிக்க அரசு.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழும் தங்கள் நாட்டு மக்களைத் திருப்பி அழைத்துக்கொள்வவதற்காக, வெனிசுவேலா நாடு இரண்டு விமானங்களை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.
அதன்படி, திங்கட்கிழமையன்று, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்துவந்த வெனிசுவேலா நாட்டவர்கள் சுமார் 190 பேர், தங்கள் நாட்டு விமானம் மூலமாகவே, தங்கள் நாட்டைச் சென்றடைந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, அமைதியும் புரிந்துகொள்ளுதலும் பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்பும் கொண்ட இப்படிப்பட்ட ஒரு உலகைத்தான் நாம் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் வெனிசுவேலா ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோ.
அதாவது, தூதரக மட்டத்தில் வெனிசுவேலா நாடும் அமெரிக்காவும் எதிரெதிராக செயல்பட்டுவந்த நிலையில், ட்ரம்ப் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுடனான மோதல் போக்கைக் கைவிட்டு, நல்ல உறவுகளை உருவாக்கிக்கொள்ள முன்வந்துள்ளது வெனிசுவேலா நாடு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |