வெனிசுலா பாணியில் தைவான் தலைவர்களைக் கைது செய்க... சீனாவில் எழுந்த குரல்
சீனாவில் சமூக ஊடகப் பயனர்கள் சிலர் வெனிசுலா பாணியில் தைவான் தலைவர்களைக் கைது செய்ய வேண்டும் என முன்வைத்துள்ள கோரிக்கை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சாத்தியமற்றது
சீனாவில் எழுந்துள்ள இந்த கோரிக்கை சாத்தியமற்றது என்றும் சீனாவின் நவீனமயமாக்கப்பட்ட இராணுவம் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு இன்னும் தயாராக இல்லை என்றும் ஆய்வாளர்கள், அறிஞர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

பல வருடங்கள் செலவிட்டு சீன இராணுவம் நவீனமயமாக்கப்பட்டாலும், அந்த ஆயுதங்களை அவர்கள் திறம்பட பயன்படுத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மட்டுமின்றி, தைவானின் பல அடுக்கு வான் பாதுகாப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், எந்தவொரு வான் தாக்குதல் அல்லது சிறப்பு நடவடிக்கை ஊடுருவல் முயற்சியும் தைவான் ஜலசந்தியைக் கடக்கும்போது கண்டறியும் அபாயத்தை ஏற்படுத்தும்.
ஆனால் அமெரிக்கா பல போர் முனைகளை எதிர்கொண்டு, எப்போதும் தயார் நிலையில் இருக்கும் இராணுவத்தையும் சிறப்பு குழுக்களையும் கொண்டுள்ளது.
சீனா தரப்பு அப்படியல்ல, கடந்த 30 வருடங்களில் அவர்கள் போர் முகத்தை எதிர்கொண்டதில்லை. இருப்பினும், தைவான் தீவை சொந்தம் கொண்டாடுவதுடன், இராணுவ பலத்தைப் பயன்படுத்தியேனும் கைப்பற்ற இருப்பதாக கூறி வருகின்றனர்.

வான் பாதுகாப்பு
இந்த நிலையில், தைவான் தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் உறுதியாக உள்ளது என்று ஜனாதிபதி லாய் சிங்-டே கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
கடந்த அக்டோபரில், T-Dome என்று அழைக்கப்படும் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜனாதிபதி லாய் அறிமுகம் செய்தார். ஜூலை மாதம், தைவானின் இராணுவம், தைபேயின் பிரதான விமான நிலையத்தை எதிரிகளின் தரையிறக்கத்திலிருந்து பாதுகாக்க ஒரு பயிற்சியை நடத்தியது, சிறிய ஸ்டிங்கர் ராக்கெட்டுகள் மற்றும் டாங்கிகளை களமிறக்கியது.

சீன இராணுவத்தில் தற்போதும் ஆளும் அரசியல் கட்சியின் தலையீடு இருக்கும் நிலையில், அதன் செயல்திறன் குறித்து சந்தேகங்கள் உள்ளதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |