நிக்கோலஸ் மதுரோவிற்கும் சாய் பாபாவிற்கும் உள்ள தொடர்பு - வைரலாகும் புகைப்படம்
மதுரோவை கைது செய்த அமெரிக்கா
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவின் ஜனாதிபதியாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் நிக்கோலஸ் மதுரோ(nicolas maduro).

நேற்று வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, அமெரிக்காவிற்கு கொண்டு வந்து சிறையில் அடைந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு மதுரோ ஆதரவளித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களுக்காகவே அமெரிக்கா இந்த ராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதாக வெனிசுலா குற்றஞ்சாட்டியுள்ளது.
வெனிசுலா குற்றஞ்சாட்டிற்கு ஏற்ப, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்வெனிசுலாவில் பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து, மோசமாக சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை சரிசெய்து, பணம் சம்பாதிக்கத் தொடங்குவோம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த செயலுக்கு ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பேருந்து ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கி, தொழிற்சங்க தலைவர், வெளியுறவுத்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளுக்கு பின்னர் வெனிசுலாவின்ஜனாதிபதியாக அவர் உருவெடுத்தது குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சாய்பாபாவுடன் உள்ள தொடர்பு
அதேபோல், நிக்கோலஸ் மதுரோ புட்டபர்த்தி சாய்பாபாவுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர் என கூறப்படும் நிக்கோலஸ் மதுரோ. வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, 2005 ஆம் ஆண்டில் அவரது மனைவியுடன் ஆந்திராவின் புட்டபர்த்தியில் அமைந்துள்ள பிரசாந்தி நிலையத்திற்கு வருகை தனது சாய்பாபாவை சந்தித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

மதுரோவின் தனிப்பட்ட அலுவலகத்தில், சைமன் பொலிவர் மற்றும் அவரது முன்னோடி முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் போன்ற புரட்சிகர தலைவர்களின் படங்களுடன் சாய்பாபாவின் புகைப்படமும் இருந்ததாக கூறப்படுகிறது.
2011 ஏப்ரலில் சாய் பாபா இறந்த போது, வேறு எந்த நாடுகளும் செய்யாத வகையில், வெனிசுலா நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றி, துக்க நாளாக அனுசரித்தது.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கூட சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், "ஒளியின் ஜீவன்" என சாய் பாபாவை குறிப்பிட்டு, "நாம் சந்திக்கும் போதெல்லாம் நான் எப்போதும் அவரை நினைவில் கொள்கிறேன். இந்த சிறந்த ஆசிரியரின் ஞானம் நம்மை தொடர்ந்து அறிவூட்டட்டும் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், வெனிசுலாவில் பல வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் வெளியேற்றப்பட்ட போதும், 1974 ஆம் ஆண்டில் சத்ய சாய் அமைப்பின் முதல் மையம் கராகஸில் நிறுவப்பட்டு, தற்போது வரை சுதந்திரமாக இயங்கி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |