நோபல் பரிசை வாங்க சென்றால் நடவடிக்கை - மிரட்டல் விடுத்த வெனிசுலா அரசு
நோபல் பரிசை வாங்க மரியா கொரினா மச்சாடோ சென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு
பல நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஆனால் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்ததாக நோபல் கமிட்டி அறிவித்தது.
நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் திகதி அன்று தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.10.41 கோடி) ஆகியவை நோர்வேயில் வைத்து வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மரியா கொரினா மச்சாடோ நோர்வேவிற்கு நேரில் சென்று நோபல் பரிசை வாங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அவர் மீது சதி, வெறுப்பைத் தூண்டுதல், பயங்கரவாதம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
நோபல் பரிசு வாங்குவதற்காக அவர் வெனிசுலாவை விட்டு வெளியே சென்றால் தப்பியோடியவராக கருதப்படுவார் என வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |