அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வெனிஸ் மக்கள் - ஏன் தெரியுமா?
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் திருமணத்திற்கு வெனிஸ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜெப் பெசோஸ் திருமணம்
அமேசான் நிறுவனரான ஜெப் பெசோஸ் உலகபணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர்.
இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு மெக்கன்ஸி ஸ்காட் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
2019 ஆம் இருவரும் பிரிந்து வாழ்வதாக அறிவித்தனர். அப்போது அமேசானின், 2.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 4 சதவீத பங்குகளை ஸ்காட்டுக்கு ஜெப் பெசோஸ் வழங்கினார். இது உலகின் விலையுயர்ந்த விவகாரத்தாக கருதப்படுகிறது.
அதனையடுத்து, 55 வயதான முன்னாள் தொலைக்காட்சி நிருபர் லாரன் சான்செஸை என்பவரை காதலித்தார். இவர்களின் திருமணம், இத்தாலியின் வெனிசில் உள்ள தீவில் வரும் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது.
வெனிஸ் மக்கள் எதிர்ப்பு
இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் வாசிகள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த திருமணத்திற்கு விருந்தினர்களாக பிரபலங்கள் பலரும் வர உள்ளதால், அங்குள்ள அனைத்து நட்சத்திர விடுதிகள் மற்றும் படகு சவாரிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"கோடீஸ்வரர்களின் திருமணங்களால் வெனிசில் விலைவாசி உயர்கிறது. இந்த திருமணத்தால் சுற்றுலா தொழிலையே நம்பியுள்ள எங்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என அந்த மக்கள், "No space for Bezos" என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், 10 மில்லியன் டொலர் மதிப்புள்ள திருமணத்தை சீர்குலைப்போம் என எச்சரித்துள்ளனர்.
200 விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருப்பார்கள், எனவே வெனிஸ் நகர குடியிருப்பாளர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இதுபோன்ற நிகழ்வை ஏற்பாடு செய்வது எளிதாக இருக்கும்" என்று வெனிஸ் நகராட்சி விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |