மேஷத்திற்கு செல்லும் சுக்கிரன்! அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
சுக்கிரன் மே 23 ஆம் திகதி, அதாவது இன்று தனது ராசியை மாற்றுகிறார். இதுவரை சுக்கிரன் மீன ராசியில் இருந்தார். இன்று மேஷ ராசிக்குள் நுழைகிறார்.
ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் மேஷ ராசியில் 26 நாட்கள் இருந்து, ஜூன் 15 ஆம் திகதி சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்வார்.
மேஷ ராசியில் சுக்கிரன் பயணிக்கும் போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்.
அந்தவகையில் தற்போது சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் எந்தெந்த ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி சாதகமாக இருக்காது. இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். பெரும்பாலான செலவுகள் தேவையற்றதாகவே இருக்கும்.
இக்கால கட்டத்தில் உங்கள் ஆரோக்கியம் சற்று நன்றாக இருக்காது. ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் இருக்க, சமச்சீரான உணவை உண்பதோடு, தினமும் உடற்பயிற்சியை செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். இக்கால கட்டத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பாக தாயுடன் சச்சரவுகள் ஏற்படலாம்.
உங்கள் தந்தையுடனான உறவும் நன்றாக இருக்காது. இக்காலத்தில் உங்கள் தந்தைக்கு சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்கள் பெற்றோரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். மொத்தத்தில், இக்காலத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சற்று அழுத்தமாகவே இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் உங்கள் போட்டியாளர்களால் வியாபாரம் மோசமாக பாதிக்கப்படும்.
மொத்தத்தில், இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் கொஞ்சம் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மேஷம் செல்லும் சுக்கிரனால் மீன ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாக சில தவறான புரிதல்களையும் கருத்து வேறுபாடுகளையும் சந்திக்க நேரிடலாம்.
இந்த காலகட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும். உங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தராமல் போகலாம். முக்கியமாக இக்காலத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
- சுக்கினால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.
- வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வழிபடுவது மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் பொருள் செல்வத்தை அதிகரிக்கும்.
- சுக்கிர தோஷம் விலகுவதற்கு வைரமும் அணியலாம்.
- தங்கம் அல்லது வெள்ளியால் ஒரு மோதிரத்தை உருவாக்கி அதை மோதிர விரலிலும் அணியலாம்.இருந்தாலும், அணிவதற்கு முன் ஜோதிடரின் ஆலோசனையை பெறுங்கள்.
- ஏழு முக ருத்ராட்சத்தை அணிவதாலும் சுக்கிரனால் ஏற்படும் தடைகள் நீங்கும்.