ஓசி சோறு என்று வீரலட்சுமியை தாக்கிய கஸ்தூரி.., அதற்கு அவர் கொடுத்த பதிலடி இது தான்
இட ஒதுக்கீடு தொடர்பாக நடிகை கஸ்தூரி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரலட்சுமி கூறிய நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை ஆரம்பித்துள்ளது.
இட ஒதுக்கீடு பிரச்சனை
நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இவர், அரசியல் விமர்சகர் என்ற பெயரில் பல விவாதங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
அவர், சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இடஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைகாரர்கள் என்று சொன்னதாக தெரிகிறது. இவர் பேசிய கருத்து சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இதற்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது வீடியோவில், "இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலைகார பசங்களா? இட ஒதுக்கீடு என்றால் என்னனு தெரியுமா?
என் குடும்பத்தில் இந்த கோட்டாவை பெறுவதற்காக 21 பேர் குண்டடி பட்டு வீரமரணம் அடைந்த வரலாறு தெரியுமா? இன்னும் 3 தினங்களில் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால் தமிழர் முன்னேற்றபடையினர் உன்னுடைய வீட்டை முற்றுகையிட்டு தக்க பாடத்தையும் புகட்டுவார்கள்" என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
கஸ்தூரி ஆவேசம்
இந்த வீடியோவுக்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "வீரத்தை பேருல மட்டும் வச்சிக்கிட்டு ஏற்கனவே சில ஓசி சோறு பேர்வழிகள் திரியுறாங்க.. அடுத்து இன்னுமொரு அரமெண்டல்.. 3 நாள் கெடு...படையோட வந்து போராட்டம் பண்ணுவேன்னு எல்லாம் சொல்லிச்சா ?
நான் கூட என்னவோன்னு நினைச்சேன். சொந்த சொரி சிரங்கு படையச் சொல்லியிருக்கு போல அந்த அம்மா" என்று கூறினார்.
மீண்டும் வீடியோ வெளியிட்ட வீரலட்சுமி
இந்நிலையில், நடிகை கஸ்தூரியை விமர்சித்து வீரலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"நீங்கள் சொல்லும் கருத்துக்கள் புரட்சிகரமான கருத்துக்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
சொல்லும் கருத்துக்களை மக்கள் மிகவும் அருவருப்புடன் பார்க்கிறார்கள்.. உங்களது கருத்துக்களை தமிழ்நாடே விமர்சிக்கும் நிலையில் நாம் தமிழர் மட்டும் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள்.
மன்னிப்பு கேட்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என நான் கூறியிருந்தேன். வருவேன், வெயிட் அண்ட் சீ" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |