86 வயது ஜாம்பவானை மைதானத்தில் சந்தித்த கோலி, ரோகித்! இளம் வீரர்களின் அறிமுகப்படுத்திய டிராவிட்
மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கேர்ஃபீல்டு சோபர்ஸை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தனர்.
இந்திய அணியின் சுற்றுப்பயணம்
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 12ஆம் திகதி டொமினிகாவின் வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.
In Barbados & in the company of greatness! ? ?#TeamIndia meet one of the greatest of the game - Sir Garfield Sobers ? ?#WIvIND pic.twitter.com/f2u1sbtRmP
— BCCI (@BCCI) July 5, 2023
ஜாம்பவானின் வருகை
இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்திற்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் கேர்ஃபீல்டு சோபர்ஸ் வருகை தந்தார்.
அவரை உற்சாகமாக வரவேற்ற இந்திய அணியின் வீரர்கள் பேசி மகிழ்ந்தனர். விராட் கோலி, ரோகித் தங்களை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
இளம் வீரர்களை அறிமுகம் செய்த டிராவிட்
பின்னர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார். தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.
இந்த நெகிழ்ச்சி தருணம் தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |