இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி

Iran
By Arbin Feb 28, 2026 06:58 PM GMT
Report

இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், Hormuz நீரிணை ஊடாக இனி கப்பல்களை அனுமதிப்பதில்லை என ஈரான் அறிவித்துள்ளது.

ஏற்றுமதி நிறுத்தம்

ஈரானின் இந்த அதிரடி முடிவால் தற்போது பல எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கச்சா எண்ணெய், எரிபொருள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி | Via Hormuz Oil Gas Shipments Suspend

இஸ்ரேலின் விமானப் படை வரலாற்றிலேயே மிகப்பெரிய தாக்குதல் என குறிப்பிடும் இராணுவ நடவடிக்கையை ஈரான் மீது சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தது. பதிலடியாக மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா

வெளிவரும் தகவலின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் குறைந்தது 200 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், Hormuz நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. வெளியான செயற்கைக்கோள் படங்களில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஃபுஜைரா போன்ற பெரிய துறைமுகங்களுக்கு அருகில் கப்பல்கள் குவிந்து கிடப்பதையும், ஹார்முஸ் நீரிணை வழியாக நகராமல் இருப்பதையும் காண முடிகிறது.

பாதுகாப்பு உத்தரவாதம்

மேலும், ஈரானின் IRGC படைகளிடம் இருந்து பல எண்ணிக்கையிலான கப்பல்களுக்கு அவசர எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈரானின் உத்தரவுகள் சட்டப்பூர்வமல்லை என்று கூறிய பிரித்தானியாவின் ரோயல் கடற்படை, கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தியது.

ஆனால், அமெரிக்க கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கையில், வளைகுடா முழுவதும், ஓமன் வளைகுடா, வடக்கு அரேபிய கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகியவற்றில் தற்போதைய சூழலில் கப்பல் போக்குவரத்து என்பது சிக்கலான விடயம் என்றும், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி | Via Hormuz Oil Gas Shipments Suspend

கிரேக்க கப்பல் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கப்பல்கள் அரேபிய வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், குவைத் மற்றும் ஈரான் போன்ற உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் உலகளாவிய எண்ணெயில் சுமார் 20 சதவீதமும் கத்தாரில் இருந்து அதிக அளவு இயற்கை எரிவாயும் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே முன்னெடுக்கப்படுகிறது.

தற்போது 14 திரவமாக்கப்பட்ட எரிவாயு கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல், திரும்பச் செல்வதா அல்லது அந்த நீரிணையில் இருந்து விலகி காத்திருப்பதா என்பதில் உறுதியான முடிவெடுக்க முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. கப்பல்களின் இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US