ரூ.32,000 தள்ளுபடி., குறைந்த விலையில் Vida V2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida V2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை அதிரடியாக ரூ.32,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
Hero MotoCorp-ன் மின் வாகன பிரிவு Vida, அதன் V2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில் விலைகுறைப்பை அறிவித்துள்ளது.
Vida V2 இப்போது அதன் முக்கிய போட்டியாளர்களான TVS iQube மற்றும் Bajaj Chetak-ஐ விட மலிவாக கிடைக்கிறது.
Vida V2 Lite இப்போது ரூ.74,000க்கு கிடைக்கிறது (ரூ.22,000 குறைப்பு), V2 Plus ரூ.82,800க்கு (ரூ,32,000 குறைப்பு) மற்றும் V2 Pro ரூ.1.20 லட்சத்திற்கு (ரூ.14,700 குறைப்பு) விற்கப்படுகிறது.
இவை அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
V2 Lite 2.2 kWh பேட்டரியுடன் 94 கி.மீ. வரையிலான ஓட்டத் திறன் (Range) கொண்டது. V2 Plus 3.4 kWh பேட்டரியுடன் 143 கி.மீ. வரையிலான ரேஞ்சை வழங்குகிறது. V2 Pro அதிகம் 3.9 kWh பேட்டரியுடன் 165 கி.மீ. ஓட்டத் திறன் கொண்டது.
V2 வரிசை மின்சைக்கிள்களில் நீக்கக்கூடிய பேட்டரி கிடைக்கும் ஒரே மொஎன்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விலை குறைப்புகள் மற்றும் விரிவான விற்பனை புள்ளிகள் மூலம் Vida விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க முயல்கிறது. Hero நிறுவனம் இவை 200 நகரங்களில் உள்ள பிரீமியா ஷோரூம்களில் விற்பனை செய்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |