பிரித்தானியாவின் பர்கண்டி கடவுச்சீட்டு: 2 புதிய விதிமுறைகளால் சிக்கல்
பர்கண்டி நிற கடவுச்சீட்டு வைத்துள்ள பிரித்தானியர்கள் இரண்டு புதிய விதிமுறைகளால் சிக்கலை சந்திக்கின்றனர்.
பர்கண்டி நிற கடவுச்சீட்டு வைத்திருக்கும் பிரித்தானிய பயணிகள், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சில செங்கன் நாடுகளுக்குப் பயணிக்கின்றபோது இரண்டு புதிய விதிமுறைகளால் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த சிக்கல்களை தவிர்க்க உங்கள் பர்கண்டி நிற கடவுச்சீட்டு 10 ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், உங்கள் கடவுச்சீட்டு, நீங்கள் வெளியேற திட்டமிட்ட நாளிலிருந்து குறைந்தது மூன்று மாதங்களுக்கு Expiry Date இருக்க வேண்டும்.
2020-ஆம் ஆண்டு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதனால், பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தற்போது ‘மூன்றாவது நாடுகளின் குடிமக்கள்’ என வகைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் செங்கன் பகுதிகளில் நுழைவுச் சட்டங்கள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளன.
2018-க்குப் பிறகு வெளியான பாஸ்போர்ட்கள் சரியாக 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாக இருக்கும். ஆனால், 2018-க்கு முன் வெளியான பாஸ்போர்ட்களுக்கு பழைய பாஸ்போர்ட் காலாவதி திகதியை (Expiry Date) அடிப்படையாகக் கொண்டு கூடுதல் 9 மாதங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
இந்த விதிகள், ஐரோப்பாவிற்கு பயணிக்கவேண்டிய பயணிகளை மட்டுமே பாதிக்கின்றன. ஏனெனில் உலகின் மற்ற நாடுகள் பலவற்றில் இது கட்டாயமல்ல.
மேலும், தற்போது செங்கன் நாடுகளில் நீங்கள் ஒரு காலாண்டில் 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறீர்கள். Brexit-க்கு முன்னர் இது கட்டுப்பாடின்றி இருந்தது.
விரைவாக கடவுச்சீட்டை புதுப்பிக்க விரும்புவோர், பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலகத்தின் விரைவுச் சேவைகளை பயன்படுத்தலாம். ஆனால், இவை வழக்கமான சேவையைவிட அதிக கட்டணமுடையவை.
மேலும் இதுகுறித்த தகவலுக்கு GOV.UK இணையதளத்தை பார்வையிடலாம்.

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |