அமெரிக்க அரசியலை நடுநடுங்க வைத்த வீடியோ! அச்சத்தில் அரசியல்வாதிகள்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், என்னவாகும் என்று குடியரசு கட்சி வெளியிட்ட வீடியோ தற்போது ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பதற வைக்கும் வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என குடியரசு கட்சி வெளியிட்டுள்ள சிறிய வீடியோ, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது பெருகி வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில், AI என்ற செயற்கை தொழில் நுட்பத்தின் மூலம் பல தில்லாங்கடி வேலைகள் செய்ய முடிகிறது.
And so it begins - #generativeai being used to create misinformation and deepfake election campaign videos.
— Theo (@tprstly) April 26, 2023
The Republican National Committee just released an ad against Biden using AI created imagery. Before the pandemic I gave a talk about the dangers of deepfakes across… pic.twitter.com/7bw2yCn24Z
இந்நிலையில் டோனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி அரசுக்கு எதிராக, அடுத்த முறை ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தால் எதிர் காலத்தில் என்ன நடக்கும் என சித்தரிக்கும் விடியோ தான் அது.
இந்த வீடியோ முழுக்க, முழுக்க செயற்கை நுண்ணறிவை கொண்டு உருவாக்கப்பட்டது. சுருக்கமாகவும், மிக நேர்த்தியாகவும், பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுடன் மனதில் பதியும் காட்சிகளை கொண்ட இந்த காணொளி முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
அதிரவைக்கும் தொழில் நுட்பம்
இது போன்ற வீடியோக்கள் மூலம் தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் மீதான மக்களின் அபிப்ராயத்தையே மாற்ற முடியும் என்கிறார்கள்.
@reuters
குறிப்பிட்ட புகைப்படத்தையோ, வீடியோ அல்லது ஆடியோ மூலம் சில நிமிடங்களில் இந்த வீடியோவை உருவாக்க முடியுமென்பது அரசியல் வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தகவலுடன் ஒரு பகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் பட்டியலை இணைத்து பகுப்பாய்வு செய்தால், அக்குறிப்பிட்ட பகுதி மக்களின் வாக்குகளை அப்படியே பெற ஒரு அருமையான தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியும் என வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
@gettyimages
எனவே இதுபோன்ற தொழில் நுட்பத்தின் மூலம், எளிதில் குறிப்பிட்ட வேட்பாளரை பற்றிய மக்கள் கொண்டிருக்கும் பிம்பத்தை உடைக்க முடியும் என்பதால், அரசியல் வாதிகள் பீதி அடைந்துள்ளனர்.