தங்கள் போர் வாகனம் குறித்து பெருமையாக பேசி புடின் ஆதரவாளர் வெளியிட்ட வீடியோ: முதலுக்கே மோசம் ஏற்படுத்திய உக்ரைன்
புடின் ஆதரவாளர் ஒருவர், தங்கள் அதி நவீன போர் வாகனம் ஒன்றைக் குறித்து பெருமையடித்துக்கொள்ளும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் எப்போதும் ஈடுபடுத்தப்படும் Aleksandr Kots என்னும் அந்த புடின் ஆதரவு ரஷ்ய ஊடகவியலாளர், புடினுடைய விலைமதிக்கத்தக்க சொத்து என வர்ணிக்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு அவர் புடினுடைய படைகள் குறித்து பெருமையாக பேசுவார்.
இந்நிலையில், சமீபத்தில் தங்களுடைய அதி நவீன போர் வாகனம் ஒன்றின் பெருமையை விளக்கும் ஒரு வீடியோவில் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால், தன்னையறியாமலே, அந்த போர் வாகனம் இருக்கும் இடத்தைக் குறித்து அந்த வீடியோவில் குறிப்பிட்டு விட்டார் Kots.
S4 Tyulpan 240mm self-propelled heavy mortar என்று அழைக்கப்படும் அந்த பிரம்மாண்ட போர் வாகனத்தைக் காட்டி, அதைக் குறித்து விளக்கிக்கொண்டிருந்த Kots, கிழக்கு உக்ரினிலுள்ள Severodonetsk என்னும் இடத்திலிருந்து அந்த வீடியோவில் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த வீடியோவை கவனமாக பார்த்த உக்ரைன் படைகள், அது எங்கே இருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து மிகச் சரியாக ட்ரோன் ஒன்றை அங்கு அனுப்பி, அந்த பிரம்மாண்ட போர் வாகனத்தைத் தாக்கி அழித்துவிட்டன.
தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, Kots தங்கள் அதி நவீன போர் வாகனத்தைக் குறித்து பெருமையடித்துக் கொள்ள, அவரது வாயிலிருந்தே அந்தப் போர் வாகனம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்த உக்ரைன் வீரர்கள், அந்த வாகனத்தை 24 மணி நேரத்திற்குள் காலி பண்ணிவிட்டார்கள்.
ரஷ்யா, முதல் முறை S4 Tyulpan 240mm ரக போர் வாகனம் ஒன்றை இழந்துள்ள நிலையில், மீண்டும் ரஷ்ய தரப்புக்கு ஒரு பெரிய அடி விழுந்துள்ளது எனலாம்.