4 ஐரோப்பிய நாடுகளுடன் வியட்நாம் புதிய வர்த்தக ஒப்பந்தம்: பொருளாதார கூட்டுறவில் புதிய மைல்கல்
Vietnam and 4 EU countries Sign Free Trade Deal: ஐரோப்பிய நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் வியட்நாம் கையெழுத்திட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத வியட்நாம் முக்கியமான நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்துள்ளது.
இது பிராந்திய மற்றும் பொருளாதார கூட்டுறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
வியட்நாம் மற்றும் நார்வே அரசின் அதிகாரப்பூர்வ கூட்டு அறிவிப்பை தொடர்ந்து ஹனோவில் ஞாயிற்றுக்கிழமை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

நார்வே, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லீச்டென்ஸ்டைன் ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளுடன் இந்த ஐரோப்பிய தாராள வர்த்தக கூட்டமைப்புடன் இந்த வர்த்தக உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக வியட்நாம் தெரிவித்துள்ளது.
நீண்ட கால பேச்சுவார்த்தை மற்றும் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு வெற்றிகரமாக இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.
முதன் முதலில் 2012ம் ஆண்டு வியட்நாமிற்கும் EFTA ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பிய பிராந்தியத்தில் தங்களது பொருளாதார தடத்தை பதிக்க வியட்நாமிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.