வியட்நாம் நாட்டை சூறையாடிய வெள்ளம்: 90 பேர் வரை உயிரிழப்பு
வியட்நாமில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 பேர் உயிரிழப்பு
வியட்நாமில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் மிக கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டு 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு பேரிடர் தடுப்பு ஏஜென்சி தகவல் தெரிவித்துள்ளது.
கல்மேகி புயல் தாக்கியதில் ஏற்பட்ட கனமழை காரணமாக வியட்நாமின் மத்திய மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் சாலைகள் பலத்த சேதமடைந்து இருப்பதுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்து வழி இன்றி தவித்து வந்தனர்.
விஞ்ஞானிகளின் சமீபத்திய எச்சரிக்கையில், தென்கிழக்கு ஆசியா முழுவதும் பருவநிலை மாற்றத்தால் நிலச்சரிவுகள் மற்றும் அழிவுகரமான வெள்ளம் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |