வியட்நாமில் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்ற நபர்., இது 1103-வது வெற்றி
Vietnam man wins 2.8 million dollar lottery: வியட்நாமில் ஒரு அதிர்ஷடசாலி நபர் 2.8 மில்லியன் டொலர் ஜாக்பாட் வென்றுள்ளார்.
Vietlott லொட்டரி
வியட்நாமின் Quang Tri மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 10 ஆண்டுகளாக Vietlott லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்துள்ளார்.
சமீபத்தில் அவர் Power 6/55 Jackpot 1 லொட்டரியில் வெற்றி பெற்று, 71.8 பில்லியன் வியட்நாம் டாங் (சுமார் $2.8 மில்லியன்) பரிசை பெற்றார்.

1103-வது வெற்றி
இந்த வெற்றி அவரது 1,103-வது பரிசு ஆகும். இதற்கு முன்பு அவர் பல சிறிய பரிசுகளை வென்றிருந்தார். அதில் மிகப்பெரிய வெற்றிகள் என்றால் 40 மில்லியன் டாங் ($1,536) மற்றும் 10 மில்லியன் டாங் ($384) ஆகும்.
வெற்றியாளர் H. என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது Dong Nai நகரில் உள்ள தொழிற்சாலை பகுதியில் வேலை செய்து வருகிறார்.
லொட்டரி சீட்டுகளை அவர் தினமும் 4 முதல் 5 வாங்குவதாகவும், பெரும்பாலும் SMS மூலம் சிஸ்டம் தானாக தேர்ந்தெடுத்த எண்களை பயன்படுத்துவதாகவும் கூறினார். இந்த முறை வெற்றி பெற்ற எண்களும் சிஸ்டம் தானாக உருவாக்கியவை.
ஆரம்பத்தில் அவர் வெற்றி செய்தியை கவனிக்கவில்லை. அடுத்த நாள் Vietlott நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தபோது தான் அவர் ஜாக்பாட் வென்றதை அறிந்தார்.
விதிமுறைகளின்படி, அவர் 7.1 பில்லியன் டாங் ($272,488) வரி செலுத்த வேண்டும். வரி கழித்த பின், அவர் 64.7 பில்லியன் டாங் ($2.5 மில்லியன்) பெறுகிறார். வெற்றி செய்தியை அறிந்ததும், அவர் உடனே தனது மனைவியிடம் தெரிவித்தார்.
முதலில் நம்ப முடியாமல் இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்தபின் தான் குடும்பம் மகிழ்ச்சியடைந்தது.
“நான் என் வாழ்க்கையை வழக்கம்போலவே தொடர விரும்புகிறேன். பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து என் மனைவியுடன் ஆலோசித்து முடிவு செய்வேன்.” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |