திருமணத்திற்காக என் கிராமத்திற்கு வருவாள் என நினைக்கவேயில்லை! வெளிநாட்டு பெண்ணை மணந்த இளைஞர் மகிழ்ச்சி
வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இந்திய இளைஞருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் சிறிய கிராமத்தில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப். இவர் வியட்நாம் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளாக யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்நாட்டை சேர்ந்த குயூன் டிசங் என்ற இளம்பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதீப் பார்த்துள்ளார்.
இருவரும் நண்பர்களாக ஆன பின்னர் காதலர்களாக மாறினார்கள். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த காதலர்கள் தங்கள் பெற்றோர் சம்மதத்தையும் வாங்கினார்கள்.
இந்த நிலையில் குயூன் டிசங் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரதீப் கிராமத்திற்கு வந்தார்.
ஆனால் அவர் பெற்றோர்களால் கொரோனா பயண கட்டுபாடுகள் காரணமாக வரமுடியவில்லை.
இதையடுத்து சமீபத்தில் கிராமத்தில் பிரதீப் - குயூன் டிசங் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு பாரம்பரிய முறைப்படி பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டதோடு, பஜ்ஜி, சாம்பார், சப்பாத்தி, பூந்தி உள்ளிட்ட பூர்வீக, பாரம்பரிய உணவு வகைகள் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிமாறப்பட்டன.
மணமகன் பிரதீப் கூறுகையில், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசித்தோம். ஆனால் அவள் என்னை திருமணம் செய்து கொள்ள என் சிறிய கிராமத்திற்கு வருவாள் என தொடக்கத்தில் நான் நினைக்கவில்லை. இது குறித்து நான் பேசிய போது உடனே ஒப்பு கொண்டாள் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
புதுமணத்தம்பதி விரைவில் வியட்நாமுக்கு திரும்பவுள்ளனர் என தெரியவந்துள்ளது.