விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்? இந்த திகதியில் தான்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி படங்களை இயக்கி வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஜூன் 9ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
இதையொட்டியே இருவரும் கடந்த ஒரே வாரத்தில் இரண்டு முறை திருப்பதி சென்றுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது திருமண ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இச்செய்தி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.