நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் தொடர்பில் அடுத்த சர்ச்சை! பரபரப்பு புகார் ஏற்பு
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் மனித உரிமை மீறல் ஏற்பட்டுள்ளதாக ஆணையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மிக கட்டுப்பாடுகளுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்வு ஒளிபரப்பு உரிமை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதால் கடும் கட்டுப்பாடுகள் இருந்தது.
திருமணம் நடைபெறும் இடத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். திருமண அழைப்பிதழில் பார் கோடு ஸ்கேன் செய்த பின்னரே விஐபி உள்ளிட்ட அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
ரிசார்ட்சின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதிக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மும்பையை சேர்ந்த சுமார் 60 பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த நிலையில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், கடற்கரை என்பது பொதுவான இடம். அந்த இடத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த இடத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காதது மனித உரிமையை மீறிய செயல் என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா திருமணம் நடந்த இடம் அருகே 3 சாலை விபத்துக்கள் ஏற்பட்டு சர்ச்சையை கிளப்பியது, இதோடு திருமணம் முடிந்து புதுமண தம்பதிகள் திருப்பதி கோவிலில் காலில் செருப்பு அணிந்து போட்டோ ஷூட் நடத்தியத்தியதாக புகார் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.