முக்கிய இடத்தில் ஷூட்டிங்கை தொடங்கவுள்ள தளபதி 65 படக்குழு, எங்கு தெரியுமா?
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது தளபதி 65 திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியகையுள்ளது. ஆம் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேற்று சன் பிக்ச்சர்ஸ் ஆஃபிஸில் தளபதி 65 படத்திற்கான டெஸ்ட் ஷூட் தளபதி விஜய்யை வைத்து நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.