2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.., திருமா மனம் நம்முடன் தான்: விஜயின் அரசியல் பேச்சு
தமிழகத்தில் உள்ள கூட்டணி கணக்குகளை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
விஜய் பேசியது
சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய விஜய், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணியை நம்பியிருக்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.
உங்களுடைய சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026 ம் ஆண்டில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவனால் வர இயலவில்லை. அவர் வர முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க மமுடிகிறது. ஆனால், அவருடைய மனம் இப்போது நம்மிடம் தான் இருக்கும்" என்றார்.
விஜயின் கருத்துக்கு பதிலளித்த திருமாவளவன், "அழுத்தம் கொடுத்தால் பணியும் அளவுக்கு நான் பலவீனமாக இல்லை" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |