பிரேமலதாவுடன் நடிகர் விஜய் மற்றும் THE G.O.A.T படக்குழுவினர் சந்திப்பு: எதற்கு தெரியுமா?
தே.மு.தி.க கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதாவை அவரது வீட்டில் நடிகர் விஜய் மற்றும் THE G.O.A.T திரைப்பட குழுவினர் நேரில் சந்தித்தனர்.
THE G.O.A.T திரைப்படத்தில் விஜயகாந்த்
நடிகர் விஜய் தனது 98வது திரைப்படமான THE G.O.A.T படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார், இந்த படம் செப்டம்பர் 5ம் திகதி வெளியாக உள்ளது.
கடந்த 17ம் திகதி இந்த THE G.O.A.T திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரெய்லர் வெளியீட்டை தொடர்ந்து திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது THE G.O.A.T திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் சிறப்பு AI தோற்றத்தில் திரையில் வருவதை உறுதி செய்தனர்.

பலேர்மோ கடலில் கவிழ்ந்த பிரிட்டிஷ் படகு: இலங்கையர், பிரித்தானியர்கள், பிரான்ஸ் நாட்டவர்கள் பரிதவிப்பு
With all the blessings of our #Captain ?????? #TheGreatestOfAllTime pic.twitter.com/rEZsbwUrTW
— venkat prabhu (@vp_offl) August 19, 2024
பிரேமலதாவை நேரில் சந்தித்த THE G.O.A.T படக்குழுவினர்
இந்நிலையில், THE G.O.A.T திரைப்படத்தில் தலைவர் விஜயகாந்த் அவர்களை சிறப்பு தோற்றத்தில் காண்பிக்க அனுமதித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகியோர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |