விஜய் ஆண்டனி மகள் மீரா எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இன்று அதிகாலை 3 மணியளவில் தன்னுடைய தந்தையின் அறையிலிருந்து மீரா சடலமாக மீட்கப்பட்டார்.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தேனாம்பேட்டை பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மீரா நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்தது.
மீராவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர், நாளை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மீரா எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதில், "Love you all... Miss you all என தொடங்கி 10 வரிகளில் எழுதியுள்ளார்.
தனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் மிஸ் செய்வேன், நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும், நானும் தவிப்பேன் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இக்கடிதத்தை கைப்பற்றியுள்ள பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |