மருத்துவமனைக்கு விஜய் வரும்போது பெண்ணை காலில் விழ சொன்னார்களா? வைரலாகும் வீடியோ
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் நேரில் பார்க்க வந்தபோது அங்கிருந்த பெண்ணை அவரது காலில் விழுமாறு சொன்னதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
விஜய் ஆறுதல்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதனை குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதில், ஏற்கனவே 42 பேர் உயிரிழந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இதில், இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
காலில் விழுந்த பெண்
அப்போது, விஜய் மருத்துவமனைக்கு வரும்போது அங்கிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருபவரை காப்பாத்துங்க சார் என அவரது காலில் விழுந்து அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Start camera action...@tvkvijayhq super பா ?
— தூய துறவி (@VSK_Talks) June 20, 2024
செம செட்டப் ? pic.twitter.com/JivZTGZrnN
அந்த வீடியோவில் நிர்வாகி ஒருவர் பெண்ணை விஜய் காலில் விழும்படி கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த மாதிரியான கருத்து சொல்லப்படும் நிலையில் வேறு கருத்துக்களும் பரவி வருகிறது.
அதாவது, விஜய் வருகிறார் என்றும் கூட சொல்லியிருக்கலாம். காலில் விழும்படிதான் சொல்லி இருக்க வேண்டும் என்று இல்லை. அந்த வீடியோவில் ஆடியோ கூட கேட்கவில்லை.
இதில் எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால், விஜய் மருத்துவமனைக்கு வந்தது அரசியல் ரீதியாக முதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |