முதலமைச்சர் விஜய்க்கு மாதம் வட்டி வருமானம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு மாதம் வட்டி வருமானம் மட்டும் எத்தனை கோடி என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
நிலையான வைப்பு தொகை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதில் வேட்பு மனு தாக்கல் செய்த அவர் தன்னுடைய சொத்து விவரங்கள் குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

அதில் தனக்கு உள்ள அசையும் சொத்துகள் , அசையா சொத்துகளின் மதிப்பு, எங்கெல்லாம் பணத்தை முதலீடு செய்திருப்பதையும் விரிவாக தெரிவித்திருந்தார்.
விஜய் தன்னுடைய சொத்தின் பெரும்பகுதியை வங்கிகளில் நிலையான வைப்பு தொகை திட்டங்களில் தான் பெரிய அளவில் முதலீடு செய்து இருக்கிறார்.
அதிகபட்சமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் மட்டும் 25 கோடி ரூபாயை டெபாசிட் செய்து வைத்திருக்கிறார்.
அதே போல ஆக்சிஸ் வங்கியில் 40 கோடி ரூபாயை நிலையான வைப்புத் தொகையாக முதலீடு செய்து வைத்திருக்கிறார். ஹெச்டிஎஃப்சி வங்கியில் 20 கோடி ரூபாயும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 15 கோடி ரூபாய் நிலையான வைப்புத் தொகை திட்டங்களில் டெபாசிட் செய்துள்ளார்.
ஆண்டுக்கு 14 கோடி ரூபாய்
மொத்தமாக அவர் 100 கோடி ரூபாயை நிலையான வைப்புத்தொகையில் மட்டுமே டெபாசிட் செய்துள்ளார். இந்த நிலையான வைப்பு தொகைகளுக்கு சராசரியாக 7.5 சதவீதம் வட்டி வருகிறது என வைத்து கொண்டால்.
இதன் மூலம் மட்டுமே விஜய்க்கு ஆண்டுக்கு 7.5 கோடி ரூபாய் அதாவது ஒரு மாததிற்கு 62.50 லட்சம் ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கும். அதே போல பல்வேறு வங்கிகளிலும் சேமிப்பு கணக்குகளில் மட்டும் 219.99 கோடி ரூபாயை வைத்திருக்கிறார்.

அதற்கு 3 சதவீதம் சராசரி வட்டி வருமானம் கிடைக்கிறது என்றால் கூட ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் வட்டி கிடைக்கும். அதாவது விஜய்க்கு சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட்கள் மூலமே ஆண்டுக்கு சுமார் 14 கோடி ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். இது ஒரு நாளைக்கு 3.80 லட்சம் ரூபாய்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |