விஜய் அரசியலுக்கு வரவிருக்கிறார்..!காக்கா-கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
விஜய் தற்போது அரசியலுக்கும் வரவிருக்கிறார், நிறைய மக்கள் சேவைகளை செய்து வருகிறார் என்று லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காக்கா-கழுகு பிரச்சனை
சமீப காலமாக இணையதள பக்கங்களில் ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் மிகவும் மோசமாக நடைபெற்று வந்தது.
இந்த வேளையில், ஜெயிலர் திரைப்பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா-கழுகு கதை நடிகர் விஜயை தாக்குவதாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர்.
இதையடுத்து நடைபெற்ற லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் காக்கா-கழுகு சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் விஜய்யும் பேசியிருந்தார்.
விஜய் கண்ணெதிரே வளர்ந்த பையன்
இந்நிலையில் இன்று சென்னையில் சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா-கழுகு சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.
#LalSalaamAudioLaunch #Thalivar about #ThalapathyVijay ♥
— Indian Cinema Hub (@IndianCinemaHub) January 26, 2024
Vijay has grown up from a small level to a massive star, and now he is entering politics and doing social welfare too.#SuperstarRajinikanthpic.twitter.com/tOEqOwGR56
அதில், காக்கா-கழுகு கதையில் நான் விஜய்யை தாக்கி பேசியதாக பலரும் தவறாக நினைத்துக் கொண்டார்கள், அது என்னை மிகவும் வேதனையடைய செய்தது. விஜய்க்கு போட்டி விஜய் தான், ரஜினிக்கு போட்டி ரஜினி தான் என்பதை இருவருமே சொல்லி இருக்கிறோம்.
விஜய் என் கண்ணெதிரே வளர்ந்த பையன், தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் ஷூட்டிங் விஜய் வீட்டில் தான் நடைபெற்றது, அப்போது விஜய்க்கு 13 வயது தான், அவருக்கு நடிப்பதில் அதிக ஆர்வம் இருப்பதாக அவரது தந்தை என்னிடம் தெரிவித்தார்.
அப்போது, முதலில் படிப்பில் கவனம் செலுத்துங்க, அப்புறம் நடிக்கலாம் என்று அறிவுரை வழங்கினேன், பின் நாட்களில் தன்னுடைய கடின உழைப்பாலும், திறமையாலும் நடிகனாகி மிகப்பெரிய இடத்தை விஜய் எட்டியுள்ளார்.
அவர் இப்போது அரசியலுக்கும் வரவிருக்கிறார், நிறைய மக்கள் சேவைகளை செய்து வருகிறார். "நான் எனக்கு விஜய்தான் போட்டி என சொன்னால் எனக்கு மரியாதை இல்லாமல் போய்விடும்.
விஜய், எனக்கு ரஜினிதான் போட்டி என சொன்னால் அவருக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். நான் எப்போதுமே விஜய்யின் நலம் விரும்பி தான்." என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Rajinikanth, Vijay, LalSalaamAudioLaunch, SuperstarRajinikanth, ThalapathyVijay, Jailer, Leo,