ரூ.16 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர்: உலகின் அந்த பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா?
கடந்த 2012ம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் விளாடிமிர் புடின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 200 பில்லியன் டொலர் (ரூ.16 லட்சம் கோடி) என கூறப்படுகிறது.
புடினின் ஆண்டு வருமானம்
விளாடிமிர் புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக கடந்த 2012ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். அவரது அதிகாரப்பூர்வமான ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் புடினின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடி மட்டும் தான் என்றும், அத்துடன் அவர் வெறும் 800 சதுர அடி வீட்டில் தான் வசிக்கிறார், அவரிடம் 3 கார்கள் மட்டுமே உள்ளது என முன்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய மொத்த சொத்து மதிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் சுமார் 200 பில்லியன் டொலர் (ரூ.16 லட்சம் கோடி) என கூறப்படுகிறது.
புடினுக்கு சொந்தமாக கருங்கடலை ஒட்டி 1.9 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளது.
இந்த மாளிகையின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.11,500 கோடி. இந்த மாளிகையில் உள்ள உணவு மேஜையின் மதிப்பு மட்டும் ரூ.4.15 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?
மேலும் இது தவிர்த்து, புடினுக்கு சொந்தமாக 19 பிரம்மாண்ட வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ரூ.5 கோடி மதிப்பில் கைகடிகாரங்கள் உள்ளது.
இதில் ‘தி ப்ளெயிங் கெர்மிலின்’ விமானத்தின் மதிப்பு மட்டும் சுமார் 716 மில்லியன் டாலர் (ரூ.6,000 கோடி) ஆகும். இதில் தங்கத்தினால் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |