தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா.., அரங்கத்திற்குள் வந்த கட்சி தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிற்கு அக்கட்சி தலைவர் விஜய் வருகை தந்துள்ளார் .
அரங்கத்திற்குள் வந்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க காலையில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் குவிய தொடங்கினர். விழாவில் பங்கேற்பதற்காக சுமார் 3000 பேர் வருகை தந்துள்ளனர்.
#WATCH | Chennai, Tamil Nadu: Supporters and followers of Actor Vijay arrive at the venue in Mahabalipuram where his party- Tamilaga Vettri Kazhagam (TVK's) second-year anniversary celebrations will be held. Drone visuals from the spot. pic.twitter.com/yi28SBjJN4
— ANI (@ANI) February 26, 2025
இவர்களுக்கு காலை தின்பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் மதிய உணவில் 20 வகையான உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 8.45 மணியளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் 9.30 மணியளில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வருகை தந்தார்.
அங்கு கட்சி தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து விழா நடைபெறும் அரங்கத்திற்க்குள் விஜய் நுழைந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |