கரூர் குறித்த கேள்வி - விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி கொடுத்த பதில்
கரூர் உயிரிழப்பு சம்பவம் குறித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எஸ்.ஏ.சி கொடுத்த பதில்
தேமுதிக கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி(83 வயது) இன்று காலமானார்.
அவருடைய உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இயக்குநரும், தவெக தலைவர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ சந்திரசேகர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.
அதைத்தொடர்ந்து, கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சதி இருப்பதாக கூறப்படுகிறது அது பற்றிய உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு, "எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்க வேண்டும் என உங்களுக்கு தெரியாதா?
இறப்பு வீட்டிற்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே நாங்கள் மனவருத்தத்தில் உள்ளோம். இந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்க வேண்டும் என தெரியாதா?" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |