தந்தையே தயங்கும் போது.. தோள் மீது கை போட விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது? பாஜக நிர்வாகி கேள்வி
மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க யார் கொடுத்த உரிமை என்று பாஜக நிர்வாகி சவுதாமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயின் விருது விழா
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.
அப்போது, மாணவ மாணவிகள் மீதும் அவர்களின் பெற்றோர்கள் மீதும் விஜய் தோள் மீது கை போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.
விழாவில் ஒரு மாணவியின் தோள் மீது விஜய் கைபோடும் போது அந்தமாணவி விஜயின் கையை எடுத்துவிட்டு ஏதோ சொல்ல முயன்றார். பின்னர், விஜயுடன் கைகளை கோர்த்தபடி அந்த மாணவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது விஜயும் புன்சிரிப்புடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பாஜக நிர்வாகி
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பாஜக நிர்வாகி சவுதாமணி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மாணவியிடம் பாடம் கற்றுக் கொண்ட நடிகர் விஜய். மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க யார் கொடுத்த உரிமை?
ஆட்டிப்படைக்கும் விளம்பர மோகம்! அப்பட்டமான விதிமீறல்! பெண் குழந்தைகள் வளர்ந்து விட்டால் தந்தை கூட தயங்கியே நிற்பார்?" என்று விமர்சனம் செய்துள்ளார்.
இவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை முழுவதுமாக பாருங்கள் என்றும் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |