5 வெள்ளை அறிக்கை; 2 கைது - விஜய்யின் அடுத்த திட்டம்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜன நாயகன் திரைப்பட தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசின் முக்கிய பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்தவரை நியமித்தது ஏன் எனக்கூறி அரசின் இந்த முடிவுக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான டெல்லி ராஜகோபால் இது குறித்து தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
தெலுங்கு முன்னேற கழகமாக இருந்தது
வெங்கட நாராயணாவின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பது தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசுக்கும் இடையேயான பாலமாக செயல்படும் ஒரு பதவி ஆகும். முதலமைச்சர் சார்பில் மத்திய அமைச்சர் மற்றும் துறை ரீதியான அமைச்சர்களை சந்தித்து பேசுவார்.

விஜய் அவர் தனது நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமித்துள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. அவருக்கு டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவில் நல்ல தொடர்புகள் இருக்கும்.
அவரை நியமனம் செய்யும் முன்னர், இது மாதிரியான பிரச்சினைகள் வரும் என அதிகாரிகள் முன்னாடியே தெரிவித்திருப்பார்கள். இருந்தும் விஜய் அவரை நியமித்திருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு நம்பிக்கையாக இருக்கிறார். 2028 ராஜ்யசபா எம்.பி ஆக அவரை நியமிக்கலாம்.
ஜூலை 15 ஆம் திகதிக்கு பின்னர் தேமுதிகவும் தவெக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் திமுக தனித்து விடப்படுகிறது. இனி எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை வராது. தொங்கு சட்டசபை தான் அமையும்.
ஒரு தமிழரை நியமிக்காமல் கன்னடரை நியமிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் வந்துள்ளதே என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டிலே கே.என்.நேரு எப்படி? நிறைய பேர் தெலுங்குகாரங்க தானே இருக்காங்க.
ஒரு காலத்தில தமிழ்நாட்டில திராவிட முன்னேற்ற கழகம் தெலுங்கு முன்னேற கழகமாக கூட இருந்ததுல. எல்லாரும் தெலுங்கா இருந்தாங்களே" என தெரிவித்துள்ளார்.
5 வெள்ளை அறிக்கை
மேலும், ஜூலை 3வது வாரத்தில் தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே 2 வெள்ளை அறிக்கைகள் வந்துள்ள நிலையில், அறநிலையத்துறை உட்பட இன்னும் 3 துறைகளில் வெள்ளை அறிக்கை வர உள்ளது.
மொத்தம் 5 வெள்ளை அறிக்கையில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், முதல்வர் விஜய் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 5 வெள்ளை அறிக்கைளை ஆதாரமாக வைத்துக்கொண்டு, தமிழக அரசின் ஊழல் செய்துள்ள திமுக எவ்வளவு பணத்தை எடுத்துள்ளார்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் முதல்வர் விஜய் விசாரணை கமிஷன் அமைக்க உள்ளார். கே.என்.நேரு இன்னும் சில நாட்களில் கைது செய்வார்கள்.
டாஸ்மாக் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். தற்போதைய தமிழக அரசு அந்த தடையை திரும்ப பெற உள்ளது.
அக்டோபர் - நவம்பரில் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் 2 - 3 தலைவர்கள் கைதாக உள்ளனர்.
அதன் பின்னர் திமுகவில் உள்ள பிரச்சினைகள் வெளியே வரும். எப்படி அதிமுக இன்று அவலநிலையில் உள்ளதோ, அதைவிட மோசமாக திமுகவை செய்ய இருக்கிறார் விஜய்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |