விஜய் ஒருத்தர் இல்லையென்றால் சினிமா துறை பாதிக்காது.., நடிகை கஸ்தூரி விமர்சனம்
நடிகர் விஜய் ஒருவர் இல்லையென்றால் சினிமா துறை பாதிக்காது என்று நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக அறிவித்தார். அவர், 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்தார்.
மேலும், அண்மையில் இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, நடிகர் விஜய் கட்சியின் அரசியல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவர் தனது 69 -வது படத்தை படத்தை கைவிடுவதாகவும் தகவல் வெளியாகியது.
மேலும், விக்கிரவாண்டி இடைதேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியது.
கஸ்தூரி விமர்சனம்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரியிடம் நடிகர் விஜய் இல்லையென்றால் சினிமா துறை எந்த அளவு பாதிக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "நடிகர் விஜய் கடந்த 30 ஆண்டுகளாக மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார். ஆனால், 150 வருடங்களுக்கு முன்பே சினிமாவை கண்டுபிடித்துவிட்டார்கள்.
அது அமிதாப் பாச்சானாக இருந்தாலும் சரி, ஒரு ஆளுக்காக சினிமா துறை பாதிக்காது. அது கலை. எல்லாருடைய பங்களிப்பை சேர்த்து கலை வளருமே தவிர, பாதிப்பு ஏற்படாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |