மலேசியாவில் விஜய்க்காக களமிறங்கிய பிரபல முகம்: யார் இந்த டத்தோ மாலிக்?
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமாக கருத்தப்படும் ஜனநாயகம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமையான இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
தளபதி கச்சேரி
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் திகதி வெளியாக இருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா “தளபதி கச்சேரி” என்ற பெயரில் பிரம்மாண்டமாக சனிக்கிழமை நடைபெற உள்ளது.

கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் தனி விமானம் மூலம் மலேசியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
மலேசியாவில் தரையிறங்கியதும் அவருக்கு அந்த நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விஜய் மலேசியாவில் வந்து இறங்கியதும், டத்தோ மாலிக் என்ற நபருடன் தோளில் கைபோட்டு உற்சாகமாக நடந்து சென்றார்.

யார் இந்த டத்தோ மாலிக்?
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக் தஸ்தகீர் என்பவர். இவர் வேலைக்காக மலேசியா சென்ற ஜவுளி கடையில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.
பின்னர் திரைப்பட விநியோகம், தயாரிப்பு மற்றும் நகை வியாபாரம் என தன்னுடைய தொழில் ராஜ்ஜியத்தை பல மடங்கு விரிவுபடுத்தினார்.

மலேசியாவில் டத்தோ மாலிக் என அழைக்கப்படும் இவர், நடிகர், நடிகைகளை தனி விமானத்தில் அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவதில் பிரபலமானவர்.
இவர் தான் ரஜினியின் கபாலி திரைப்படத்தை மலாய் மொழியில் தயாரித்து விநியோகம் செய்து விளம்பரப்படுத்தினார்.
இந்நிலையில், விஜயின் கடைசி திரைப்படமாக கருதப்படும் ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழாவை டத்தோ மாலிக்கிடம் ஒப்படைத்துள்ளது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.
டத்தோ மாலிக் தளபதி கச்சேரி நிகழ்ச்சிக்காக, மலேசிய அரசிடம் சிறப்பு அனுமதி வாங்கி புகித் ஜலீல் மைதானத்தை சுமார் 5 மாத காலத்திற்கு முன்னே வாடகைக்கு எடுத்து மேடை அமைத்து பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |